• Sep 21 2024

தனுஷ் விவகாரத்தில் ஏற்பட்ட புதிய திருப்பம்: மதுரை தம்பதியினர் கொடுத்த விளக்கம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த தம்பதியினர் கதிரேசன் மற்றும் மீனாட்சி. இவர்களது மூத்த மகன் கலையரசன் பிளஸ் ஒன் படிக்கும் போது காணாமல் போய்விட்டார். இந்நிலையில் சினிமாவில் தனுஷ் நடித்த படத்தை பார்த்துவிட்டு தனது மகன் கலையரசன் தான் தனுஷ் எனவும் அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் ரசிகர்களிடத்தே பெரும் சர்ச்சைகளை கிளப்பி இருந்தது.

இந்நிலையில் மதுரை தம்பதியினருக்கெதிராக இயக்குநர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தங்களுக்கெதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் மன்னிப்புக் கோரா விட்டால் 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மதுரை தம்பதியினர், தங்களைக் கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சித்ததாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும் என குற்றச்சாட்டுகளைக் கூறி கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுசுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், தவறினால் 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் எனவும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் கஸ்தூரிராஜா சார்பில் கதிரேசன் தம்பதியினருக்கு வழக்கறிஞர் காஜாமொய்தீன் கிஸ்தி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மதுரை தம்பதியர், 'இதுவரை எந்த நோட்டீஸும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. நாங்கள்தான் அவர்களுக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்' என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கஸ்தூரிராஜா தரப்பில் இருந்து, "வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இதுகுறித்து இப்போது பேசுவது முறையாகாது" என்று தெரிவித்துள்ளாராம்.

Advertisement

Advertisement