• Sep 21 2024

கோப்ரா படத்திலிருந்து வெளியாகிய புதிய அப்டேட்- அமெரிக்காவில் ரிலீஸ் செய்த ஏ.ஆர் ரகுமான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளதோடு இப்படத்திலிருந்து துள்ளல், உயிர் உருகுதே மற்றும் அதீரா உள்ளிட்ட சிங்கிள் பாடல்களும் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் 2 பாடல்களில் தராங்கினி எனும் ஒரு பாடலும் "ஏலே இளஞ்சிங்கமே" எனும் மற்றொரு பாடலும் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோப்ரா படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஹ்மான் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

இப்படம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement