பிரபல தெலுங்கு இயக்குநர் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகின்றார்.அத்தோடு படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகின்றார்.
இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த படத்தின் முதல் பாடல் 'வா வாத்தி' வருகிற நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
இந்நிலையில், 'வாத்தி' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த வீடியோவை ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், 'நவம்பர் 10-ஆம் தேதி வாத்தி படத்தின் முதல் பாடல் வெளியாக போகிறது.
இதிலிருந்து ஒரு அன்பிளாண்ட் வீடியோ' என்று தனுஷ் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முதல் பாடலை பாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.இதனால் ரசிகர்கள் செம குஷியடைந்துள்ளனர். மேலும் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Vaathi / Sir first single vaa vaathi( Tamil ) masteru ( telugu ) from 10 th. A @gvprakash musical and my favourite @_ShwetaMohan_ has sung it. Hope you guys like it. #venkyatluri @SitharaEnts pic.twitter.com/QHJR7eb6H0
Listen News!