• Sep 21 2024

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி படத்தின் புதிய அப்டேட்-புதிய பணியை ஆரம்பித்த படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் ஆரம்பத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான சண்டைக் கோழி, தாமிர பரணி, திமிரு, பூஜை ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றிருக்கின்றது.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய வீரமே வாகை சூடும் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது ‘லத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

இப்படத்தினை இவரது நெருங்கிய நண்பர்களான ராணா மற்றும் ரமணா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். இந்த படத்தை வினோத் குமார் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த பூஜையும் இன்று நடைபெற்றது.

விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கும் இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஷால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement