தென்னிந்திய சின்னத்திரையில் ரசிகர்களின் மனதைத் கொள்ளை கொண்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழில் இதுவரை 5சீசன்கள் நிறைவடைந்துள்ளது.
அதன்படி ஆரவ், ரித்திகா, முகின், ஆரி, ராஜு ஆகியோரே 5 சீசன்களின் வெற்றியாளர்களாக தேர்வாகியிருக்கின்றனர்.இதனை அடுத்த பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சியில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது இதில் பாலாஜி முருகதாஸ் வெற்றியாளராக தேர்வாகினார்.
இதனை அடுத்து 6வது சீசன் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.இது குறித்த புரோமோ ஒன்றும் அண்மையில் வெளியாகியிருந்தது. அதில் இந்த சீசன் வித்தியாசமான முறையில் நடைபெறவுள்ளதாக ராஜு நடித்திருந்தார்.
இந்த நிலையில் இப்போது நிகழ்ச்சி குறித்து புதிய அப்டேட் கிடைத்துள்ளது.அதாவது கடந்த 2 நாட்களுக்கு முன் இந்நிகழ்ச்சியின் புரோமோ படமாக்கப்பட்டதாம். வரும் செப்டம்பர் 9ம் தேதி பிக்பாஸ் 6வது சீசன் புரோமோ வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த முறையும் கமல்ஹாசன் அவர்களே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!