பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைத் தன்னகத்தே கொண்டு மிகப்பெரிய வெற்றிபெற்ற ஒரு நிகழ்ச்சி தான் 'குக்வித் கோமாளி'. இது ஒரு சமையல் நிகழ்ச்சிதான் என்றாலும் இதில் இடம் பெறும் நகைச்சுவைக்கு அளவே இல்லை.
இந்நிகழ்ச்சியானது வெற்றிகரமாக மூன்று சீசன்களை கடந்து விட்ட நிலையில், இதன் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அதிரடித் திருப்பங்கள் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன. அந்தவகையில் இதுவரை காலமும் கோமாளியாக களமிறங்கிய ஷிவானி இந்த சீசனில் குக்காக பங்கேற்றிருக்கின்றார்.
இதனையடுத்து கடந்த வாரம் யார் வெளியேறுவார்கள் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில் யாருமே வெளியேறவில்லை என்பதனை நடுவர்கள் அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் மணிமேகலை இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இவ்வாறு எதிர்பாராத டுவிஸ்ட்டுகள் இடம்பெற்று வருகினர் இந்த நிகழ்ச்சியில் தற்போது மற்றுமோர் மாற்றம் இடம்பெற்றிருக்கின்றது. அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்ற அந்த நேரத்தில் பாரதி கண்ணம்மா 2 சீரியலை ஒளிபரப்பு செய்யப் போகின்றார்களாம்.
அந்தவகையில் சனி, ஞாயிறு தினங்களில் 9மணிக்கு ஒளிபரப்பாகி வந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியை தற்போது 9.30 மணிக்காக ஒளிபரப்பு செய்ய இருக்கின்றார்கள். இதனால் 9மணி முதல் 9.30 வரை பாரதி கண்ணம்மா சீசன் 2வும், 9.30 முதல் 11மணி வரை குக்வித் கோமாளியும் ஒளிபரப்பாக இருக்கின்றது. இவ்வாறு நேரத்தைப் பின்னுக்கு தள்ளிப் போட்டமையினால் ரசிகர்கள் செம கடுப்பில் இருக்கின்றார்களாம்.
Listen News!