• Sep 20 2024

மருதாணி நிகழ்ச்சியுடன் ஆரம்பமான நியூஸ் ரீடர் கண்மணியின் திருமணம்- வைரலாகி வரும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சமீப காலமாக சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களும் பிரபலமாகி வருகிறார்கள்.அவர்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளனர்.அந்தவகையில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திப்பவர்தான் நியூஸ் ரீடர் கண்மணி சேகர்.

நடிகர் நவீன் மலையாளத்தில் நடிகராக அறிமுகமாகி தமிழில் மசாலா படம்,பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் இதயத்தை திருடாதே சீரியலின் கதாநாயகன் தான் நவீன்

அந்தவகையில் சினிமா துறையில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக நடிகர், நடிகைகள் உள்ளனர்.தற்போது அந்த வரிசையில் இணைந்திருப்பவர்கள்தான் இதயத்தை திருடாதே சீரியல் நடிகர் நவீன், இவர் பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரை காதலித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது நடிகர் நவீனுக்கும், செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடத்தே வைரலாகியது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் பங்கேற்ற அவர்கள் தங்கள் திருமண திகதியை அறிவித்தனர்.

அந்தவகையில் நியூஸ் ரீடர் கண்மணியின் மெஹிந்தி படங்கள் சமுகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement