• Sep 20 2024

காதல் கணவனுடன் ரொமான்ஸ் செய்யும் நிக்கி கல்ராணி... அதுவும் கணவன், மனைவி இருவரும் கறுப்பு உடையில்... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாத் திரையுலகை பொறுத்தவரையில் ஒன்றாக இணைந்து நடித்த நடிகர், நடிகைகள் பலரும் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். அந்தவகையில் கோலிவுட்டில் இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் தொடர்ந்து ஒரு ஹனிமூனை கடந்து இரண்டாவது ஹனிமூனை தங்களது ஜோடியுடன் படு ரொமான்டிக்காக கொண்டாடி வருகின்றனர். 


இதில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இரண்டாவது ஹனிமூனை ஸ்பெயினில் சிறப்பாகக் கொண்டாடி வரும் நிலையில், தற்போது நிக்கி கல்ராணி - ஆதி தமப்தியினரும் பிரான்ஸ் நாட்டில் தங்களது 100 ஆவது திருமணநாள் ஹனிமூன் கொண்டாட்டத்தை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

அதாவது 'டார்லிங், யாகாவராயினும் நாகாக்க, கோ 2, மொட்டை சிவா கெட்ட சிவா, ஹரஹர மகாதேவகி, மரகத நாணயம்' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த பெங்களூருவை சேர்ந்த ஒரு நடிகையே நிக்கி கல்ராணி.


மேலும் 'மிருகம், ஈரம், அரவாண்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் ஜோடியாக இணைந்து நடித்த நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இந்த ஆண்டு மே மாதம் 18-ஆம் திகதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். 


அவர்களது திருமண வரவேற்பில் தெலுங்கு நடிகர் நானி, கோலிவுட் பிரபலங்கள் ஆர்யா - சாயிஷா, பிக் பாஸ் பிரபலங்கள் எனப் பல பிரபலங்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

திருமணம் முடித்த கையோடு இவர்கள் கலிபோர்னியாவுக்கு ஹனிமூனுக்கு சென்றிருந்தனர். அதன் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு டிரெண்டாக்கிய இருவரும் தற்போது, திருமணமான 100வது நாளை பிரான்ஸ் நாட்டில் கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில் இவர்கள் தங்களது ரொமான்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement