• Nov 19 2024

நிக்கி கல்ராணி திருமண நாளில் அவருடைய அக்கா வீட்டில் நடந்த முக்கிய விசேஷம்- கொண்டாட்டத்தில் குடும்பத்தினர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் டார்லிங் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நிக்கி கல்ராணி. இப்படத்தைத் தொடர்ந்து ஜெய், ஜுவா, சிவா, ராகவா லாரன்ஸ் ,ஆதி ,பிரபு தேவா எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தற்பொழுதும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முதல் தனது காதலனான ஆதியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணப் புகைப்படங்களும் வெளியாகின.

திருமணத்திற்குப் பிறகும் இவர் நடிப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு திருமணமான அதே தினத்தில் நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா கல்ராணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சஞ்சனா இரண்டு வருடங்கள் முன்பு ஆஷிஷ் பாஷா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அத்தோடு குழந்தை பிறந்ததையும் அவரது குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement