• Sep 20 2024

ஐநா சபையையே ஆட்டம் காண வைத்த நித்தியானந்தா சுவாமி- கைலாசா என்பது கற்பனை நாடா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சர்ச்சைக்குரிய சாமியாராக இருக்கும் நித்தியானந்தா மீது பல வழக்குகள் குவிந்து வந்த நிலையில் யாருக்கும் அறியாத கைலாசா என்ற தீவில் தலைமறைவாக உள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் நித்யானந்தாவை பற்றி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து தகவல் வந்து கொண்டிருந்தது.

கைலாசா என்று ஒரு தீவு இருக்கிறதா என்ற குழப்பத்தில் எல்லோரும் உள்ளனர். இந்நிலையில் ஐநா சபைக்கு ஆட்டம் காட்டி உள்ளார் நித்தியானந்தா. அதாவது சமீபத்தில் ஐநா சபை மாநாடு நடந்தது. இந்தக் கூட்டத்தில் கைலாசவை சேர்ந்த பிரதிநிதிகள் என்ற சிலர் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு பேசியிருந்தனர்.


 இதைத்தொடர்ந்து ஐநா சபையே கைலாசாவை ஏற்றுக் கொண்டதாக கூறப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து பிபிசி ஐநா சபையை தொடர்பு கொண்டு இது குறித்து கேள்வி கேட்டுள்ளது. இதனால் பதறிப் போய் ஐநா சில விஷயங்களை கூறியுள்ளது.

அதாவது ஐநா சபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்படும். அந்த இரு நிகழ்ச்சிகளிலும் பொது விவாதங்கள் தலைப்பில் பேசப்படுவதால் ஆர்வமுள்ள எவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ள முடியும். அப்போது தான் நித்யானந்தாவின் பிரதிநிதிகள் பேசி உள்ளனர்.அந்த இரண்டு நாள் நிகழ்வில் கைலாசா என்ற கற்பனை நாட்டின் பிரதிநிதிகள் ஆக பேசியவர்களின் வார்த்தைகள் நிராகரிக்கப்படும் என ஐநா கூறியுள்ளது. மேலும் அங்கு நடந்த கூட்டத்திற்கும் அந்தப் பிரதிநிதிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறி உள்ளனர்.


இவ்வாறு நித்தியானந்தா ஒரு மர்ம தேசத்தில் இருந்து கொண்டு ஐநாவையே பதற அடித்துள்ளார். ஆனால் தற்போது வரை அவர் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்ற எந்த தகவலும் தெரியவில்லை. இதை அறிந்த ரசிகர்கள் தலைவன் நித்தி ஐநா சபையை ஆட்டம் காண வைத்துள்ளார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement