தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் மூலம் சிறந்த நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.இதனை அடுத்து தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தான் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் அதிகம் நடிப்பதற்கான காரணத்தை கூறினார். அதில் அவர் பேசியதாவது : “காக்கா முட்டை படத்திற்கு பின்னர் என்னை நிறைய பேர் அழைத்து பாராட்டினார்கள், ஆனால் யாரும் படங்களில் நடிக்க வாய்ப்பு தரவில்லை.
தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, துல்கர் போன்ற நடிகர்கள் கூட பாராட்டினார்கள் ஆனால் அவர்களும் வாய்ப்பளிக்கவில்லை.காக்கா முட்டை படத்துக்கு பின் ஒன்றரை வருஷமா சும்மா தான் இருந்தேன். அதனால் தான் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களை அதிகளவில் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தேன்.
இங்கே ஹீரோ, ஹீரோயின் இடையே நிறைய பாகுபாடு உள்ளது. இதுவரை 15 பெண்கள் சார்ந்த படங்களில் நடித்துவிட்டேன். இருந்தும் இன்றுவரை எந்த ஒரு பெரிய ஹீரோவும் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. அவர்கள் ஏன் என்னை அழைக்கவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என கவலையில்லை. எனக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுவே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது” என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
Listen News!