தென்னிந்திய சினிமாவில் கே.ஜி.எப் என்னும் திரைப்படத்தின் மூலம் பிரபல்யமான நடிகராக வலம் வருபவர் தான் யாஷ்இ இரண்டு பாகமாக வெளியாகிய இப்படம் இவருக்கு நல்லதொரு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
இவர் சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷை பெங்களூருவில் சந்தித்தார். பெங்களூரு தாஜ் வெஸ்டினில் நடந்த இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இருவரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து, யாஷின் அரசியல் பிரவேசம் குறித்த வதந்திகள் சமூக ஊடகங்களில் வைரலானது. இருப்பினும், நடிகருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இது வெறும் ஊகம் தான் என அதை மறுத்துள்ளனர்.
இதில் எந்த உண்மையும் இல்லை என்றும், இது ஒரு சாதாரண சந்திப்பு தான் எனவும் அரசியலுக்கும் இந்த சந்திப்புக்கும் தொடர்பில்லை என்றும் யாஷுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தவிர, யாஷ் தனது சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட எட்டு வருடங்களை KGF படத்துக்காக அர்ப்பணித்தார். KGF 3 பற்றி கூறிய அவர், "எங்களிடம் ஒரு பிளான் உள்ளது, ஆனால் விரைவில் செய்யும் எண்ணம் இல்லை. இப்போது நான் வேறு ஏதாவது செய்ய விரும்புகிறேன். 6-7 வருடங்களாக, நான் KGF படத்தில் வேலை செய்தேன். எனவே, எல்லாம் சரியானால், KGF 3 படத்தை பிறகு உருவாக்குவோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
Listen News!