• Nov 10 2024

எவ்வளவு பெறுமதியில் கொடுத்தாலும் நடிகை அமலா இந்தவொரு விசயத்தை பண்ணமாட்டாரா?- ரொம்ப இளகிய மனசா உங்களுக்கு?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில்  ரஜினி, கமல், கார்த்தி, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை அமலா.இவர் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.

 இதற்கிடையே அவர் தெலுங்கிலும் நடிக்க துவங்கினார். தெலுங்கில் நடிக்க தொடங்கியபோது நடிகர் நாகார்ஜுனாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது பிறகு நாகார்ஜுனாவை அவர் திருமணமும் செய்து கொண்டார்.பேட்டி ஒன்றில் அவர் பேசும்பொழுது அவர் பட்டுப்புடவையை எப்போதும் கட்டுவதில்லை என கூறியிருந்தார், 


அதற்கான காரணத்தை அவர் கூறும் பொழுது மிகவும் வியப்பாக இருந்தது. உயிர்களிடத்தில் மிகவும் ஜீவகாருண்யம் பார்ப்பவராக அமலா இருக்கிறார்.அதனால் அசைவ உணவு கூட அவர் உண்ண மாட்டார். இந்த நிலையில் பல பட்டு புழுக்களை கொன்றுதான் ஒரு பட்டுப் புடவை உருவாகுகிறது. 


எனவே அதை நான் உடுத்துவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் உயிர்களை பாதிக்கும்படி இருக்கும் எந்த ஒரு விஷயத்தையும் செய்வதில்லை என்று அவர் கூறியுள்ளார். ஹைதராபாத் ப்ளூ கிராஸ் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் அமலா. மேலும் தற்பொழுது ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement