க்ரூப் டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் லாரன்ஸ். சூப்பர் சுப்பராயனிடம் பணியாற்றிக்கொண்டிருந்த லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த் அவரை நடன பள்ளியில் சேர்த்துவிட்டார். அதனையடுத்து பல பாடல்களில் க்ரூப் டான்ஸராக நடனத்தில் பின்னியெடுத்தார் லாரன்ஸ்.
சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் படத்தின் மூலம் நடன அமைப்பாளராகும் வாய்ப்பு லாரன்ஸுக்கு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர்.இதனையடுத்து சில பாடல்களில் தோன்றி நடனம் ஆடிய லாரன்ஸ் அற்புதம் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.
தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் முனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து காஞ்சனா சீரிஸை இயக்கிய அவருக்கு காஞ்சனாவும், காஞ்சனா 2வும் மெகா ஹிட்டை கொடுத்தது
லாரன்ஸ் கடைசியாக காஞ்சனா 3 படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் அவருக்கு பலத்த அடியை கொடுத்தது. தற்போது அவர் ருத்ரன் படத்தில் நடித்திருக்கிறார்.இப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்த நிலையில் ருத்ரன் பட ப்ரமோஷனில் கலந்து கொண்ட லாரன்ஸ் முதன்முறையாக தன்னுடைய மனைவி பற்றி கூறியுள்ளார். அதாவது தன்னுடைய அம்மாவின் காலில் விழுவது போல மனைவியின் காலில் விழுந்தும் ஆசீர்வாதம் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.மேலும் அவங்க என்னையே நம்பி வந்தவங்க அவங்க வந்ததுக்கு பிறகு தான் என்னோட லைஃபே மாறிடுச்சு. என்னோட மனதுல நினைக்கிற மாதிரியே நடப்பாங்க என புகழ்ந்து பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!