கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்தவர் ரோபோ ஷங்கர். விஜயகாந்த் போல் அச்சு அசலாக உடல்மொழியையும், மிமிக்ரியையும் கொடுத்து அதகளமும் செய்தார்.
சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கேற்ப திரைப்படங்களிலும் அறிமுகமானார் .அதன் படி தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானார்.ரோபோ ஷங்கர் நிறைய படங்களில் கமிட்டாகிவந்த சூழலில் திடீரென அவரது உடல் எடை ரொம்பவே சரிந்தது.
ஆஜானுபாகுவாக இருந்த ரோபோ ஷங்கர் உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளித்தார். அவரை பார்த்த பலரும் ரோபோ ஷங்கருக்கு என்னாச்சு என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
ரோபோ ஷங்கர் இப்படி ஆனதற்கு அவருக்கு அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் இருந்தது என்றும், இதன் காரணமாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது என்றும் சிலர் பேச தொடங்கினர்.
ஆனால் இதுகுறித்து ரோபோ ஷங்கர் தரப்பு மௌனம் காக்க; அவருக்கு நெருக்கமான நடிகர் போஸ் வெங்கட், ரோபோ ஷங்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது உண்மைதான். விரைவில் உடல்நலம் தேறி மீண்டு வந்துவிடுவார் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்பொழுது ஜிம்முக்கு சென்று வொர்க்கவுட் செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் தான் மட்டும் முன்னேறினால் முயற்சியாளன். தன்னை சுற்றி இருப்பவர்களையும் முன்னேற்றினால் வெற்றியாளன். எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே.உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு.எத்தனை கைகள்என்னை தள்ளிவிட்டாலும்என் நம்பிக்கை என்னை கை விடாது என்றும் போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!