• Sep 20 2024

'நோ மீன்ஸ் நோ' பெண்களின் மனவலியை நடனத்தினால் பிரதிபலித்த ரவீனா, ஐஷு ! சிலிர்க்க வைக்கும் வீடியோ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7ல் இடம்பெற்ற டான்ஸ் டாஸ்க் ஒன்றில் ரவீனா மற்றும் ஐஷு இணைத்து நடனமாடி  பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிது. எனினும் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.


மேலும், பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை  மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து புதியவர்கள், பழையவர்கள் என வீட்டிற்குள் மோதல் வலுத்துள்ளது. எனினும் போட்டி போட்டியாகவே நகர்கின்றது.

இவ்வாறான நிலையிலேயே போட்டியாளர்கள் இடையே இடம்பெற்ற டான்ஸ் ஷோவில் ரவீனா மற்றும் ஐஷு இணைத்து  நடனமாடி பட்டையை கிளப்பியுள்ளனர்.


அதன்படி, 'உசுரே போகுது உசுரே போகுது' என்ற பாடலுக்கு பெண்கள் மீது இடம்பெறும் பாலியல் சேட்டைகள், பெண்களின் மனவலி போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக இவர்களின் நடன நிகழ்ச்சி அமைந்திருந்தது .

இதன் முடிவில் 'நோ மீன்ஸ் நோ' என்கிற செய்தியை சரியாக நடனமாடி பிரதிபலித்துள்ளீர்கள் என்று  விசித்ராவும் பாராட்டினார். 


Advertisement

Advertisement