தமிழ் சினிமாவின் உலக நாயகன் மட்டுமன்றி உச்ச நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் உருவாகும் படங்களோ ஏராளம். தொட்டதெல்லாம் தங்கம் என்று கூறுமளவிற்கு இவர் நடிப்பில் உருவாகும் படங்களில் அதிகளவானவை வெற்றிப் படங்களாகவே அமைந்துள்ளன. இந்நிலையில் இவரின் நடிப்பில் தற்போது 'இந்தியன் 2' என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது.
இத்தனை காலமாக கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கமல்ஹாசன் பங்கேற்று ஹீரோவாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அத்தோடு சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் இவர்களுடன் இணைந்து நடிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்க பிரபல இந்தி வில்லன் நடிகர் குல்சன் குரோவர் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னை வந்து இந்தியன் 2 படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் படப்பிடிப்பின் பொது ஆவர் கமலை சந்தித்த புகைப்படங்களை தனது வலைத்தளத்தில் பகிர்ந்து "இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிப்பது உற்சாகம் அளிப்பதாக உள்ளது" என்று மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.
மேலும் இந்தியன் 2 படத்தை முடித்து விட்டு மணிரத்னம் இயக்கும் புதிய படம் ஒன்றில் கமல்ஹாசன் நடிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் 1987இல் வெளியான 'நாயகன்' என்ற படத்தில் கமல்ஹாசன் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இவர்கள் இருவரும் இணைகிறார்கள்.
Listen News!