நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஏற்கனவே இந்த படத்தில் சஞ்சய்தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், அர்ஜூன், உள்பட ஒருசிலர் வில்லன்களாக நடித்து வருவதாக கூறப்படுகிறது
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பதும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் படக்குழுவினர் படத்தை உருவாக்கி வருகின்றனர்.
தற்போது கடந்த 80கள் மற்றும் 90களில் பல திரைப்படங்களில் வில்லன்களாக நடித்த நடிகர் பாபு ஆண்டனி இந்த படத்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.‘மக்கள் என் பக்கம்’ ’பூவிழி வாசலிலே’ ’மைடியர் லிசா’ ’நாட்டுக்கு ஒரு நல்லவன்’ உள்பட பல திரைப்படங்களில் நடிகர் பாபு ஆண்டனி வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் ‘லியோ’ படத்தில் இன்னும் எத்தனை வில்லன்கள் தான் இணைவார்கள் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். த்ரிஷா, பிரியா ஆனந்த், ஆகியோர் கதாநாயகியாக நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!