• Nov 19 2024

அரசியலுக்கு யார் வரணும் யார் வரக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை- விஜய் பேச்சுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் அண்மையில் வெளியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு  தளபதி, தன்னுடைய 'விஜய் மக்கள் இயக்கம் சார்பில்' இன்று ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்து வருகிறார்.

இந்த நிகழ்வில் விஜய் பல்வேறு விதமான நிகழ்வுகள் குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது நாளைய வாக்காளர்கள் நீங்கள் தான் என அரசியல் குறித்தும் தற்போதைய அரசியலை விமர்சிக்கும் விதமாகவும் பேசியுள்ளார். "நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்து புதிதாக நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள். அதேபோல் நம்ம விரலை வைத்து நம்ப கண்ணையே குத்தி கொள்வது என்கிற என்ற ஒரு விஷயம் இருக்கு கேள்வி பட்டு இருக்கீங்களா? அதை தான் இப்போ நாம செஞ்சுக்கிட்டு இருக்கோம்.


காசு வாங்கி கொண்டு ஓட்டு போட்டு கொண்டு இருக்கிறோம். ஒருவர் 15 கோடி செலவு செய்கிறார் என்றால் அதற்கு முன் அவர் எவ்வளவு சம்பாதிச்சு இருக்கணும். உங்களுடைய எஜுகேசன் சிஸ்டம்ல இதெல்லாம் கத்துக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். அது எப்போ நடக்கும்னு தெரியல. ஆனால் ஒவ்வொரு மாணவர்களும், தங்களுடைய அப்பா - அம்மாவை காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க என்று சொல்லணும். இதற்க்கு  முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் சொன்னீங்கன்னா அவங்க கேட்பாங்க. ஏன்னா நீங்க தான் அடுத்தடுத்த வருடங்களில் வரும் புதிய வாக்காளர்கள் என கூறினார். 

தொடர்ந்து பேசிய விஜய் முடிஞ்ச வரைக்கும் எல்லார் பற்றியும் படிச்சு தெரிஞ்சுக்கோங்க அம்பேத்கர்,காமராஜர்,பெரியார், உள்ளிட்ட தலைவர்களை பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள்" நல்ல நல்ல விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க மற்றது எல்லாத்தையும் விட்டிடுங்க. இது தான் இன்டைக்கான ரேக் கோம் மெசேஜ் என்றும் தெரிவித்தார்.


இதனை அடுத்து நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் விஜய் வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்று நல்லது தானே சொல்லி இருக்காரு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வரவேண்டும் யார் வரவேண்டாம் என கூற யாருக்கும் உரிமையில்லை என அண்ணா அறிவாலத்தில் நடந்த கூட்டத்தில் பேசியிருக்காரு என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement