• Sep 20 2024

யாரும் மிஸ் பண்ணல எப்படா முடிப்பிங்க- ராஜா ராணி 2 சீரியலின் இறுதிநாள் ஷுட்டிங்கில் எடுத்த போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'ராஜா ராணி 2' இந்த சீரியலை பிரவீன் பெனட் இயக்கி வந்த நிலையில், சமீபத்தில் இந்த தொடரை நான் இயக்கவில்லை என்பதை வெளிப்படையாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதை தொடர்ந்து 'ராஜா ராணி 2' தொடரில், இருந்து ஆல்யா மானசா விலகிய பின்னர் கடந்த ஒரு வருடமாக சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரியா விஸ்வநாதனுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், திடீரென இந்த சீரியலில் இருந்து ரியாவும் வெளியேறினார்.


இதனால் தற்பொழுது சந்தியா கதாப்பாத்திரத்தில் ஆஷா கவுடா என்பவர் நடித்து வருகின்றார். அத்தோடு சீரியல் ரிஆர்பியிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.

இதனால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி தற்பொழுது கடைசி நாள் ஷுட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சந்தியா கர்ப்பமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement