தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் என்பதை தாண்டி, பாலிவுட் படமான ஸ்லம் டாக் மில்லினர் படத்திற்காக, இரண்டு ஆஸ்கர் விருதை பெற்றதன் மூலம் உலக அளவில் பிரபலமானவர் ஏ.ஆர்.ரகுமான். தற்போதைய இசையமைப்பாளர்களின் பாடல்கள் அடிக்கடி காப்பி சர்ச்சையில் சிக்கினாலும் கூட, ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் எப்போதுமே கேட்பதற்கும், உணர்வதற்கும் ஒவ்வொரு முறையும் புதிதாக இருப்பது இவரின் தனி சிறப்பு என கூறலாம்.
குறிப்பாக இவர் இசையில், ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான'பொன்னியின்செல்வன் படத்தின் பாடல்கள் வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரின் குழுவினர், பூனேவின் இசை கச்சேரி நடத்தியுள்ளனர். இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் மெய் மறந்து பாடிக்கொண்டிருந்ததால் அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை.
பூனேவில் 10 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சியும் நடத்த கூடாது என, காவல்துறை கூறியுள்ள நிலையில் தடையை மீறும் விதமாக, இரவு 10 மணிக்கு மேல் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்ததை கண்டிக்கும் விதமாக, ஏ.ஆர்.ரகுமான் பாடிக்கொண்டிருந்த போதே... திடீர் என மேடைக்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் இசை நிகழ்ச்சியை நிறுத்துமாறு கெத்து காட்டினார்.
இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதே போல் நெட்டிசன்கள் பலர், இந்த காவல் அதிகாரியின் கடமை உணர்ச்சியை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!