நடிகர் ராதாரவி தமிழ்நாட்டு நடிகரும், பா.ஜ.க அரசியல்வாதியும் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராகவும் பதவி ஏற்றிருக்கிறார். இந்நிலையில் நடிகர் ராதாரவி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு தரிசனத்தை முடித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் "தமிழகம் ஒரு ஆன்மீக பூமி தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே ஒரு ஆன்மீக நாடு" பாரம்பரிய வழிபாட்டு முறைகள் மாற்றக்கூடாது. பட்டன பிரவேசத்திற்கு தடை விதித்த உத்தரவை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
உதாரணத்துக்கு பழனி கோயிலுக்கு படி வழியே செல்லும் பக்தர்களை செல்லக்கூடாது என சொல்ல முடியாது, அதுபோல தான் பாரம்பரிய வழிபாட்டு முறையும் சிதம்பரம் கோயிலை பொருத்த மட்டிலும் அங்கு அரசு சார்பாக சென்றாலே பிரச்சினை தான் இதுவும் ஆனால் அங்கு எதுவும் செய்ய முடியாது. தி.மு.க ஓராண்டு ஆட்சி என்பதை பொருத்தவரை எதுவும் சொல்வதற்கில்லை.
இந்த அரசால் நான் எதுவும் அனுபவிக்கவில்லை எனக்கு வேண்டியதை நான் செய்து கொள்வதால் எதுவும் தெரியவில்லை.சினிமாத்துறையில் ஆளும் கட்சி தலையீடு உள்ளது என்பது உண்மைதான் அதே வேளையில் தமிழ் திரைப்படங்கள் அதிக தொகை கொடுத்து வாங்க ஆட்கள் இல்லை என்பதால் பெரிய பெரிய படங்களை அதிக முதலீடு செய்து கொள்ள அவர்கள் வாங்குகிறார்கள் என்பதும் உண்மைதான்.
தெலுங்கு திரையுலகில் பலர் சிண்டிகேட் போட்டு படத்தை வாங்குவது போல் தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர் முதல் அனைவரையும் மரியாதையாக நடத்துகிறார். முதலில் எதிர்ப்பாக பார்ப்பவர்கள் தற்போது நட்புடன் பார்க்கின்றனர் அவர் பேசியுள்ளார்.
பிற செய்திகள்:
- விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு லோகேஷ் இறக்கும் முன்னணி நடிகர்-அதுவும் எந்த கதாப்பாத்திரத்திற்கு தெரியுமா..?
- நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா…சொக்கிப்போன ரசிகர்கள்..!
- திருமண வரவேற்பில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர்-வைரலாகும் புகைப்படங்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!