ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், சமுத்திரக்கனி, ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.பான் இந்தியா படமாக வெளியாகி 1000 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ரசிகர்களை செம ஆட்டம் போட வைத்தது. நடனத்தில் சிறந்து விளங்கும் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் வெறித்தனமாக நடனம் ஆடியிருப்பார்கள். உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட நாட்டு நாட்டு பாடல் முதலில் கோல்டன் குளோப் விருதை வென்றது. அதனைத் தொடர்ந்து சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கரில் நாமினேஷன் ஆனது.
சில வாரங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடல் விருது வென்றது. இதனை இசையமைப்பாளர் கீரவாணியும், பாடலை எழுதிய சந்திரபோஸும் பெற்றுக்கொண்டனர் மேலும், ஆஸ்கருக்கு தகுதியான பாடல்கள் ஏராளமாக இருக்கின்றன.
ஆனால் இந்தப் பாடலுக்கு எப்படி ஆஸ்கர் கொடுத்தனர் என கேள்வி எழுப்பிய அவர்கள், பணம் கொடுத்துதான் ஆஸ்கர் விருதை வென்றிருப்பார்கள் எனவும் கூறினர். அதுமட்டுமின்றி 80 கோடி ரூபாய்வரை ஆஸ்கருக்காக ராஜமௌலி செலவழித்தார் எனவும் பேசப்பட்டது. இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், "ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்க முடியாது என்பது எல்லோருக்குமே தெரியும். ஆஸ்கர் விருதுக்காக ஆர் ஆர் ஆர் படத்தை பரப்புரை செய்வதற்கு மட்டும்தான் 8.5 கோடி ரூபாய் செலவு செய்தோம். அதிலும் நாங்கள் முதலில் 5 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் செலவு அதிகமாகிவிட்டது.
ஆஸ்கரை பணம் கொடுத்து வாங்கலாம் என்பதே ஒரு நகைச்சுவை. ஏனெனில் அது 95 வருடங்களாக கொடுக்கப்பட்டுவரும் விருது. ரசிகர்களின் அன்பை மட்டும்தான் வாங்கலாம். அதேசமயம் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும், ஜேம்ஸ் கேமரூனும் ஆர்ஆர்ஆர் படம் குறித்து சொல்லியதை விலை கொடுத்து வாங்க முடியாது" என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!