• Nov 14 2024

10 பிரிவுகளில் பரிந்துரை.. ஆனால் ஒரு ஆஸ்கர் விருது கூட இல்லை! Killers Of The Flower Moon புறக்கணிக்கப்பட அமெரிக்கர்களை விமர்ச்சித்தது தான் காரணமா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

உலக அளவில் கடந்த ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்களுக்கும், அதில் நடித்தவர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவிக்கும் ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறுகிறது.  

96 அகாடமி ஆஸ்கர் விருது விழாவில், 10 பிரிவுகளின் கீழ்  தேர்வாக இருந்த 'கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’ என்ற திரைப்படம் ஒரு விருது கூட வெல்லாதது ரசிகர்களை பெரும் ஏமாற்றமடைய செய்துள்ளது.

இந்த படம் அமெரிக்கர்களை விமர்சித்ததன் காரணத்தினால் தான் ஆஸ்கரில் புறந்தள்ளப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

கடந்த ஆண்டு மார்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் லியோனார்டோ டிகார்ப்ரியோ, லிலி கிளாட்ஸ்டோன், ராபர்ட் டி நிரோ நடிப்பில் வெளியானது தான் இந்த படம். 


அமெரிக்க பழங்குடி இன மக்களான ஓசேஜ் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்த நிலத்தில் இருந்த கச்சா எண்ணெய் வளத்திற்காகவும், அவர்களிடம் இருந்த செல்வத்தை அபகரிக்கும் முயற்சியாக அவர்கள் மர்மமான முறையில் உயிரிழக்கப்பட்டார்கள்.

இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளார் மார்டின் ஸ்கார்செஸி.


இந்தப் படம் சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு என ஒட்டுமொத்தமாக பத்து பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய தினம் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநருக்கான விருது கிறிஸ்டோஃபர் நோலனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை எம்மா ஸ்டோன் வென்றுள்ளார்.

ஆனால் 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட  கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் படத்திற்கு ஒரு விருது கூட வழங்கப்படாதது குறித்து ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Advertisement

Advertisement