• Sep 21 2024

போஸ்டரில் என் போட்டோ கூட போடல: தமன்னா விடுத்த அதிர்ச்சி புகார்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை தமன்னா சந்த் சா ரோஷன் செகரா என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து 2006-இல் வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்றி கொடுத்தார் நடிகை தமன்னா

தொடர்ந்து முன்னணி நடிகர்களான தல, தளபதி, தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை தக்கவைத்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் , ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக கலக்கி வருகிறார்.அத்துடன் நடிகை தமன்னா வெப் சீரிஸ் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

தமன்னா தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சினிமா துறையில் பெண்களுக்கு மதிப்பு இல்லை என கூறி இருக்கிறார்.

"யாரும் பெண்களை சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. நான் பணியாற்றும் படங்களில் நான் எதாவது கருத்து கூறினால், அது சரியா என என்னையே இன்னொரு முறை யோசிக்க வைப்பார்கள். சில நேரங்களில் நான் கோபமாக என் ஒபினியனை சொன்னால் தான் எடுத்துக்கொள்வார்கள்."

"ஒரு காலத்தில் நான் ஹீரோவின் love interest ரோல்களில் நடித்து எனக்கே போர் அடித்துவிட்டது. தற்போது எனக்கு பல விதமான கேரக்டர்கள் வருகிறது, இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை" என கூறி இருக்கிறார்.

அத்தோடு ஹீரோவுக்கு அதிகம் சம்பளம் தருகிறார்கள், ஆனால் ஹீரோயின்களுக்கு சம்பளம் மிக மிக குறைவு எனவும் தெரிவித்து இருக்கிறார்.

"நான் இரண்டு pan India படங்களில் நடித்து இருக்கிறேன். அவர்களிடம் சம்பளத்தை கூட எளிதில் வாங்கிவிடலாம், ஆனால் என் புகைப்படம் போஸ்டரில் வருவது மிக மிக கடினம். ஆண் நடிகர்கள் ப்ரோமோஷனில் கலந்துகொள்ளவில்லை என்றால் யாரும் கண்டுகொள்வதில்லை, ஆனால் நான் இரண்டு ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றால்.. எனக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை என செய்தி வரும்" என தமன்னா கோபமாக கூறி இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement