ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டிடேயத்தில் மே 28ம் தேதி இரவு நடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத காத்திருந்தது. தல தோனி ஆட்டத்தை பார்த்தே ஆக வேண்டும் என தமிழ்நாட்டில் இருந்து பலரும் குஜராத் கிளம்பினார்கள். மஞ்சள் கலர் டிசர்ட்டில் தங்கள் பாசத்தை வெளிப்படுத்தியபடியே அகமதாபாத் சென்றடைந்தார்கள்.
திரையுலக பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அகமதாபாத் சென்றுவிட்டார்கள். அத்தோடு இன்று இரவு தல அடி, அடினு அடிக்கப் போகுது. அதை பார்த்து நாம் சந்தோஷத்தில் குதிக்கப் போகிறோம் என ஆசையாக அகமதாபாத் ஸ்டேடியத்திற்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தல அடி, அடினு அடிப்பதற்கு பதிலாக மழை கொட்டு கொட்டுனு கொட்டி எடுத்துவிட்டது. எனினும் இதையடுத்து இறுதிப் போட்டி திட்டமிட்டபடி நடக்கவில்லை. ஐபிஎல் இறுதிப் போட்டி மே 29ம் தேதி நடக்கும் என அறிவித்திருக்கிறார்கள்.
இறுதிப் போட்டியை காண ஆசையாக அகமதாபாத் சென்றார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அழகாக உடை அணிந்து ஸ்டேடியம் சென்றவருக்கு ஏமாற்றம் தான். ஐஸ்வர்யா மட்டும் அல்ல தல தோனி ரசிகரான இயக்குநர் விக்னேஷ் சிவனும் தான் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு சென்றுவிட்டு சும்மா திரும்பியிருக்கிறார்.
ஐஸ்வர்யாவும், விக்னேஷ் சிவனும் இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டியை பார்த்துவிட்டு தான் ஊர் திரும்புவார்கள். இருக்கும் வேலையை எல்லாம் விட்டுவிட்டு ஒரு நாள் இரவு தானே என அகமதாபாத் சென்றால் இப்படியாகிவிட்டது. இறுதிப் போட்டியை காண வெளிநாட்டில் இருந்து வந்தார் விக்னேஷ் சிவன். முன்னதாக சென்னையில் தோனி அன்ட் டீம் விளையாடிய போட்டிகளை பார்க்க ஐஸ்வர்யா ரஜினியும், விக்னேஷ் சிவனும் தவறாமல் வந்தார்கள்.
ஐஸ்வர்யாவோ தன் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் சென்னையில் போட்டியை பார்த்து ரசித்தார். அத்தோடு விக்னேஷ் சிவன் தன் காதல் மனைவியான நயன்தாராவுடன் வந்து போட்டிகளை ரசித்தார். விக்னேஷ் சிவன் மஞ்சள் நிற டி சர்ட்டில் வர, நயன்தாராவோ வெள்ளை நிற சட்டை, கவுனில் வந்து போட்டியை கண்டு ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டி தள்ளி வைக்கப்பட்டது குறித்து ஏகப்பட்ட மீம்ஸுகள் வலம் வந்து கொண்டிருக்கிறது. அத்தோடு நேற்றைய போட்டிக்கான டிக்கெட் இன்று செல்லும். ஆனால் நேற்று தல தோனி வரும்போது வீச டிக்கெட்டை கிழித்தவர்களின் நிலைமையை நினைத்தால் தான் சிரிப்பு சிரிப்பாக வருகிறது என மீம்ஸ் போட்டுள்ளனர். இந்த மழை இறுதிப் போட்டி அன்று தானா வர வேண்டும் என டிசைன், டிசைனாக மீம்ஸ் போட்டிருக்கிறார்கள்.
நேற்று இரவு போட்டியை பார்த்து முடித்துவிட்டு உடனே ஊர் திரும்பிவிடலாம் என விமானம் மற்றும் ரயில்களில் டிக்கெட் புக் செய்தவர்களின் நிலைமையை நினைத்தாலும் பாவமாக இருக்கிறது. அவர்களையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் சும்மா விடவில்லையே. அத்தோடு பங்கம் செய்திருக்கிறார்கள். பணம் போச்சேனு ஃபீல் செய்பவர்கள் கூட அந்த மீம்ஸுகளை பார்த்தால் குபீரென்று சிரித்து விடுவார்கள் என்று தான் கூற வேண்டும்.
It is 3 o'clock in the night when I went to Ahmedabad railway station, I saw people wearing jersey of csk team, some were sleeping, some were awake, some people, I asked them what they are doing, they said we have come only to see MS Dhoni @IPL @ChennaiIPL #IPLFinal #Ahmedabad pic.twitter.com/ZJktgGcv8U
Listen News!