• Sep 20 2024

கனடாவில் மட்டுமல்ல சென்னையிலும் இது இடம் பெறும் - ரசிகர்களுக்கு குட் நியூஸ் கூறிய ஷிவாங்கி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் தன்னுடைய சினிமா கெரியரை ஆரம்பித்தவர் தான் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் இவரது குழந்தைதனமான பேச்சு அனைவரையும் கவர்ந்தது.இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2வில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஸ்வினுடன் இணைந்து இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களை வேறு லெவலில் கவர்ந்தது. தொடர்ந்து பல வித்தியாசமான கெட்டப்புகள் முயற்சிகளையும் செய்தார். இந்த நிகழ்ச்சியால் பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று வருகின்றார்


அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இது தவிர காசேதான் கடவுளான உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.ஆல்பம் பாடல்களிலும் பாடி வருகிறார். இதில் நடிக்கவும் செய்கிறார். மேலும் இசைக்கச்சேரிகளிலும் பாடும் வாய்ப்பு ஷிவாங்கிக்கு கிடைத்து வருகிறது. சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் இவர் பிரபலங்களுடன் இணைந்து பாடினார்.

இந்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.இதையடுத்து இவர் சென்னையிலும் இதுபோன்ற கலைநிகழ்ச்சிகளில் பாடினால் தாங்களும் நேரில் வந்து பார்ப்போம் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இப்படி கேட்ட ஒரு ரசிகைக்கு ஷிவாங்கி தற்போது பதிலளித்துள்ளார். விரைவில் சென்னையிலும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் தான் பங்கேற்க உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி ஷிவாங்கி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது எனலாம்.


Advertisement

Advertisement