• Nov 14 2024

பிரபல நடன இயக்குநர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்…சோகத்தில் திரையுலகம்..!

rip
Jo / 1 year ago

Advertisement

Listen News!

டோலிவுட்டில் புகழ்பெற்ற நடன இயக்குநரான ராகேஷ் மாஸ்டர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 53. ராகேஷ் ஒரு வாரத்திற்கு முன்பு விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஐதராபாத் திரும்பியபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததை அடுத்து ஐதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த ராகேஷின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்க தொடங்கியதை அடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அவர் உயிரிழந்தார்.

ராகேஷ் மாஸ்டர் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலமானதை அடுத்து, அவரது அசாதாரண திறமையை பார்த்து வியந்து போன சினிமா நட்சத்திரங்கள் அவருக்கு தெலுங்கு படங்களில் பணியாற்ற வாய்ப்பு அளித்தனர், அங்கு அவர் பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்தார். இதுவரை அவர் 1500 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி உள்ளார்.

திருப்பதியில் பிறந்த ராகேஷ் மாஸ்டரின் இயற்பெயர் எஸ். ராமராவ். அவர் நடன இயக்குநராக தனது கெரியரை தொடங்குவதற்கு முன் முக்கு ராஜு என்கிற டான்ஸ் மாஸ்டரிடம் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

இதையடுத்து நடன இயக்குநராக அறிமுகமான பின்னர் வெங்கடேஷ், நாகார்ஜுனா, மகேஷ் பாபு, ராம் பொதினேனி, பிரபாஸ் என பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் ராகேஷ் பணியாற்றினார்.

இந்த நிலையில், நோய் பாதிப்பால் நடன இயக்குநர் ராகேஷ் மரணமடைந்து இருப்பது தெலுங்கு திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ராகேஷ் மாஸ்டரின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்களும், தெலுங்கு திரையுலக பிரபலங்களும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement