• Sep 20 2024

பிரபல நாடக இயக்குநர் லண்டனில் காலமாகியுள்ளார்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்தய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் கலைஞர்கள் சமீபகாலமாக இறப்புக்குள்ளாகி வருவது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பிரபல நாடகக் கலைஞர் ஒருவர் இறந்துள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பியாவில் திறமையான நாடக இயக்குநராக இருப்பவர் பீட்டர். இவர், 1963 ஆம் ஆண்டு லார்ட் ஆப் தி லாப்ளைஸ் மேடை நாடகத்திற்கு பிரபலமானார். அதன்பின்னர், 1966 ஆம் ஆண்டு வெய்ஸின் மாரட், சேட் 1970-ல் போன்ற படைப்புகளுக்காகவும் பேசப்பட்டார்.

தொடர்ந்து இவர் தனது நடிப்பாலும், இயக்கத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த நிலையில், 1985 ஆம் ஆண்டு அவர் 9 மணி நேரம் வரக்கூடிய மகாபாரத இதிகாசத்தை இயக்கினார். இந்தியாவின் இதிகாசமான இந்த நாடகம் பல நாடுகளிலும் வரவேற்பை பெற்றது.

அவர், இயக்கிய பல நாடகங்களில் அவரது மனைவி நடாஷா பியாரி முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில், இன்று நாடக இயக்குநர் பீட்டர் புரூக் லண்டனில் காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement