• Nov 10 2024

படத்தில் கூறப்பட்டது எதுவும் உண்மை இல்லை- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராக்கெட்ரி படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

மாதவன், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜுலை 1ம் திகதி 5 மொழிகளில் வெளியாகிய திரைப்படம் தான்  ராக்கெட்ரி.இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் பயோபிக் படமான இதில் நம்பி நாராயணன் ரோலில் மாதவனும், அவருடைய மனைவி ரோலில் சிம்ரனும் நடித்திருந்தனர். 

 அனைத்து தரப்பிலும் வரவேற்பை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபீசிலும் நல்ல வசூலை பெற்றது. இஸ்ரோ விஞ்ஞானியும், ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியருமான நம்பி நாராயணன் தவறான குற்றச்சாட்டுக்களால் பல பிரச்சனைகளை சந்தித்து, பிறகு தான் குற்றம் அற்றவர் என்பதை நிரூபித்தார்.


தற்போது மற்றொரு புதிய பிரச்சனையில் இந்த படம் சிக்கி உள்ளது.ஆகஸ்ட் 24 ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்கள், முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயண் கைது செய்யப்பட்ட போது நாடு கிரையோஜெனிக் என்ஜின்களை உருவாக்குவதில் மிகவும் தாமதத்தை சந்தித்தது.

அதே நேரத்தில் நாடு பெரும் நிதி இழப்பை சந்தித்தது.விஞ்ஞானி நம்பி நாராயணன் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்தும் உண்மையல்ல. முன்னாள் விஞ்ஞானியான இவருக்கு இஸ்ரோவில் பணிபுரிந்ததற்காக பத்மபூஷன் விருது கிடைக்கவில்லை.நம்பி நாராயணன் கிரையோஜெனிக் என்ஜின்களில் பணிபுரிந்த குழுவில் கூட இல்லை. 


நம்பி நாராயணன், ஏபிஜே அப்துல் கலாமுடன் மிகக் குறுகிய காலம் மட்டுமே பணியாற்றினார். நம்பி நாராயணன் அப்துல் கலாம் தவறு செய்தபோது அவருக்கு உதவியது மற்றும் திருத்தியது போல் படத்தில் கூறப்படுவது போல் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

ராக்கெட்ரி படம் ஏற்கனவே பட பிரச்சனைகள், சர்ச்சைகளில் சிக்கி வெளியே வந்த நிலையில், தற்போது படத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பலவும் பொய்யானவை என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சி ஆக்கி உள்ளது. 

Advertisement

Advertisement