• Nov 14 2024

வாரிசு, துணிவு பட சிறப்புக் காட்சிகளை வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு நோட்டீஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மதுரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வாரிசு, துணிவு திரைப்படங்களை ஜனவரி 11,12,13,18 ஆகிய தேதிகளில் நள்ளிரவு காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்டதாக கூறி 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டிஸ் அனுப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

அத்தோடு 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால் திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 11, 12, 13மற்றும் 18 ஆகிய நான்கு நாட்களில் காலை 9.00 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி நடத்துவதற்கு பார்வை 3-ல் காணும் அரசாணையில் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.



ஆனால், அனுமதி கொடுக்கபட்ட நேரத்தை தவிர்த்து கூடுதலாக அதிகாலையில் சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாக புகார்ககள் வந்ததை தொடர்ந்து, காவல்துறை மற்றும் வட்டாட்சியர்களிடம் விசாரணை அறிக்கை பெறப்பட்டது.மேலும்  அந்த விசாரணை அறிக்கையில், 11 ஆம் தேதி அன்று அதிகாலை 1 மணி மற்றும் 4 மணிக்கு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அத்தோடு இது தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன்படி விதிமீறிய செயலாகும். இந்நிலையில், பதினைந்து நாட்களுக்குள் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி, விதிகளை மீறிய 34 திரையரங்குகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement