பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை வித்யா பாலன். பாலிவுட் திரைப்படங்களில் மற்றும் விளம்பரப் படங்களில் தோன்றிய இவர் தனது திரைத்துறை பயணத்தை பல இசைக் காணொளிகள், சவர்க்கார விளம்பரங்கள் மற்றும் பல வணிக ரீதியிலானவற்றில் தொடங்கி, 'பாலோ தேகோ' என்னும் வங்காள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார்.
பிறகு இவர் ஹிந்தி திரைப்படமான 'பரிநீத்தா' என்பதில் அறிமுகமாகி பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினைப் பெற்றார். மேலும் தனது முதல் வணிக வெற்றியை ராஜ்குமார் ஹிரானியின் 'லகே ரஹோ முன்னாபாய்' படத்தின் மூலம் பெற்றார்.
இவ்வாறாக சினிமாவில் தனித்துவமாக நடிக்கும் திறன் கொண்ட நடிகையான வித்யா பாலன் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ ஷூட்டிற்கு அண்மையில் தெரிவித்த கருத்து சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது
அதாவது இது குறித்து கருத்து வெளியிட்ட வித்யா பாலன் "இதில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்றும், ஒரு ஆண் இதுபோல் போட்டோ ஷூட் நடத்துவது இதுவே முதல் முறை. இதனை மக்கள் ரசிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் "அந்த போட்டோக்களால் யாராவது புண்பட்டால் அவர்கள் அந்த போட்டோக்களை பார்க்க கூடாது" எனக் கூறியுள்ளார். அது மட்டுமல்லாது "எஃப் ஐ ஆர் பதிவு செய்த நபர்களுக்கு வேற வேலை எதுவும் இல்லாததால் அவர்கள் தங்கள் நேரத்தை இப்படி வீணடிக்கிறார்கள்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு பெண்ணாக இருந்து இவர் கூறிய இக்கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி அவரின் இக்கருத்தினை பெருமளவில் விமர்சிப்பதோடு இதற்கு ரசிகர்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தும் வருகின்றனர்.
பிற செய்திகள்
- லட்சுமி மேனனுக்கா இந்த நிலைமை..?என்னம்மா இப்பிடி மாறிட்டீங்களே..!
- ஆத்திரமடைந்த சந்தானத்தின் ரசிகர்கள்…இடையில் நிறுத்தப்பட்ட படம்…காரணம் என்ன தெரியுமா..?
- பேய் சிரிப்பு சிரித்த மணிமேகலை…வேப்பிலை அடிக்கணும் எனக்கூறிய உசைன்…வைரலாகும் வீடியோ..!
- ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா..? வாயைப் பிளக்கும் திரையுலகம்..!
- உடல் எடையைக் குறைத்த கீர்த்தி சுரேஷ்…எதற்காக இப்படி..?புடவையில் வெளியான புகைப்படங்கள்…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!