90களில் பாலிவுட்டின் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் சோனம் கான். இவர் 1988 ஆம் ஆண்டு யாஷ் சோப்ரா இயக்கிய 'விஜய்' என்றார் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் 1989 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'திரிதேவ்' என்ற படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
இந்தப் படத்தில் விஜய் படத்தின் முத்தக்காட்சிகளில் சோனம் கான் அசத்தலாக நடித்திருந்தார். சொல்லப்போனால் அன்றைய காலக்கட்டத்தில் முதல் காட்சியிலேயே முத்தக்காட்சியில் நடித்த ஒரே நடிகை என்றால் அது இவர் தான். அந்த சமயத்தில் சோனம் கானுக்கு வயசு வெறும் 16மட்டும் தான்.
இதனைத் தொடர்ந்து இவர் நடித்த 'மிட்டி அவுர் சோனா' என்னும் படத்தில் சோனமுக்கு நிர்வாண காட்சிகள் இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் கதறி அழுதுள்ளார்.பின்னர் அந்த ஷூட்டிங்கில் அவர் அத்தை வந்து சாக்லேட் ஒன்றை கொடுத்து நிர்வாண காட்சியின் முக்கியத்துவத்தை விளக்க உடனே சாக்லேட் கிடைத்த ஆசையில் அந்த காட்சியில் நடித்துள்ளார் சோனம்.
இவ்வாறு படங்களில் பிசியாக நடித்து வந்த சோனம் 1991 ஆம் ஆண்டில் தான் நடித்த 'த்ரிதேவ்' என்ற படத்தை இயக்கிய ராஜீவ் ராய் என்பவரை காதல் திருமணம் செய்துக் கொண்டார். ' அதுமட்டுமல்லாது 'திரிதேவ்' படப்பிடிப்பின் போது தான் ஒருவருடன் டேட்டிங்கில் இருந்ததாக சோனம் ஒரு பேட்டியில் ஏற்கெனவே கூறியிருந்தார் .
அந்த சமயத்தில் ராஜீவும் ஒரு பெண்ணுடன் டேட்டிங் செய்து வந்துள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர்கள் இருவரின் நட்பும் காதலாக மாறி இருவரும் திருமண வாழ்க்கைக்குள் இணைந்து கொண்டனர். அந்த நேரத்தில் சோனத்திற்கு வயது வெறும் 19 தான். அதேசமயம் யாஷ் சோப்ரா சோனுவிடம் இப்போ திருமணம் செய்துக் கொள்ள வேண்டாம் என எவ்வளவோ சொல்லியும், அவர் இறுதி வரை கேட்கவேயில்லை.
இதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு வரை தான் ஒப்பந்தமான அனைத்துப் படங்களிலும் நடித்து முடித்த சோனம், அதன்பின் முதலில் அமெரிக்காவிலும், பின் ஐரோப்பாவிலும் குடியேறி இருந்தார். இந்த சமயத்தில் தான் கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி அதிகரித்தது. இதனால் இந்தியாவுக்கு திரும்பலாம் என சோனம் சொல்ல, ராஜீவ் அதனை உடனடியாக மறுத்தார்.
பின்னர் அவரை திருமணம் செய்தது தவறு என சோனம் ஒரு கட்டத்தில் தானாகவே உணர்ந்தார். ஆனால் மகன் இருந்ததால் அவன் பெரியவனாகும் வரை பிரிய வேண்டாம் என அந்த சமயத்தில் இருவரும் முடிவு செய்தனர். இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு சோனம் ராஜீவ்வை விவாகரத்து செய்தார்.
அதனைத் தொடர்ந்து பின்னர் முரளி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். இவ்வாறாக 6 வருடம் மட்டுமே சினிமாவில் நடித்தாலும் சோனம் திரையில் செய்த மேஜிக் அவரை ரசிகர்களால் மறக்க முடியாதபடி இன்றுவரை வைத்திருந்தது. நடிகை சோனத்திற்கு தற்போது 50 வயதாகின்றது. இந்நிலையில் சோனம் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது
Listen News!