• Nov 19 2024

தயாரிப்பாளர் போனிகபூரின் காரிலிருந்து 39 லட்சம் மதிப்புள்ள வெள்ளிகளை கைப்பற்றிய அதிகாரிகள்- விசாரணையில் தெரியவந்த உண்மை

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் 39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 66 கிலோ வெள்ளிப் பொருட்களை, கர்நாடகா மாநிலம் தாவங்கரேவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஹெப்பலு சுங்கச்சாவடி அருகே உள்ள சோதனைச் சாவடியில் இந்திய தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது.

சென்னையில் இருந்து மும்பைக்கு பிஎம்டபிள்யூ காரில் ஐந்து பெட்டிகளில் உரிய ஆவணங்கள் இன்றி வெள்ளிப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் வெள்ளி கிண்ணங்கள், கரண்டிகள், தண்ணீர் குவளைகள் மற்றும் தட்டுகளை கைப்பற்றினர். டிரைவர் சுல்தான் கானுடன் காரில் இருந்த ஹரி சிங் மீது தாவங்கரே ஊரக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


விசாரணையில், அந்த கார் போனி கபூருக்கு சொந்தமான பேவியூ ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அந்த வெள்ளி பொருட்கள் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் குடும்பத்தினருக்கு சொந்தமானது என்று ஹரி சிங் ஒப்புக்கொண்டார்.


உரிய ஆவணங்கள் இல்லாததால் வெள்ளிப் பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த வெள்ளி பொருட்கள் தயாரிப்பாளர் போனி கபூரின் குடும்பத்துக்கு சொந்தமானதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல தயாரிப்பாளர் போனி கபூருக்கு சொந்தமான காரில் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement