சிம்ரன் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாமா இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.
மேலும் தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார்.
அதுமட்டுமல்லாமல் 1995-இல் இவரது முதல் படம் சனம் ஹர்ஜாய் தோல்விப் படமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான தேரே மேரே சப்னே இவரது முதல் வெற்றிப் படமாகும்.
இதற்கிடையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.
இவற்றுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
தமிழ் திரைப்படங்களில் 2000ஆம் ஆண்டு மிக அதிக சம்பளம் (75 இலட்சத்திற்கும் மேல்) வாங்கியவர் ஆவார். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.இந்நிலையில் இவரது லேட்டஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!