நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் . 'ருத்ரன்', 'சந்திரமுகி 2', 'அதிகாரம்', 'துர்கா' உட்படப் பல படங்கள் இதில் முக்கியமானவை.
குறிப்பாக, 'சந்திரமுகி 2' அதிக எதிர்பார்ப்புக்குள்ளதாக ஒன்றாக அமைந்துள்ளது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்காக லாரன்ஸ் தயாராகி வருகிறார்.
மேலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். மேலும் இவர் தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என அவதாரம் கொண்டவர்.
சினிமாவில் நடிப்பதை தாண்டி அவர் மற்றவர்களுக்கு உதவுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ 3 கோடி கொடுத்து உதவியிருந்தார்.
இந்நிலையில் லதா என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகர் ராகவா லாரன்ஸிற்கு ராகவி என்ற மகள் இருக்கிறார். அவரது புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் லாரன்ஸிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என பார்த்து வருகிறார்கள்.
Listen News!