• Nov 19 2024

அட நம்ம விஜய்யா இது..? ரொம்ப அப்பாவியாய் இருக்காரே... வெளியான இதுவரை யாருமே பார்த்திராத புகைப்படம்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். 'தளபதி' என சிறப்பாக அழைக்கப்படுகின்ற இவருக்கு தமிழகத்தில் மட்டுமன்றி உலகெங்கிலும் ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு. இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது. இருப்பினும் இறுதியாக வெளியாகியிருந்த 'பீஸ்ட்' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை. 



இதனைத் தொடர்ந்து இவர் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதுமட்டுமன்றி தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் தூண்டியுள்ள படங்களில் ஒன்றாகவும் இருந்து வருகின்றது.



சமீபகாலமாக திரைப்பிரபலங்கள் பலரினதும் அன்சீன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன வெளியாகி சமூக வலைத்தளங்களை வட்டமிட்ட வண்ணம் தான் இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையின் புகைப்படம் வெளியாகி இருந்தது.




இதனைத் தொடர்ந்து தற்போது விஜய்யின் மற்றுமோர் சிறு வயதுப் புகைப்படம் வெளியாகி இருக்கின்றது. இதில் பார்ப்பதற்கு ஒரு அப்பாவியை போல் தோற்றம் அளிக்கின்றார். அப்புகைப்படத்தை பார்த்த தளபதி ரசிகர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

Advertisement

Advertisement