• Sep 20 2024

பஞ்சு மெத்தை உடையழகி... அட நம்ம ஹன்சிகாவா இது..? அழகாலே ரசிகர்களை கொல்லுறாங்களே...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் திரையுலக ஆரம்ப பயணத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று டாப் டென் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருகின்றார். 


மேலும் 'சின்ன குஷ்பு' என்று தமிழ் நாட்டில் தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டும் வருகின்றார். இவர் சினிமாவில் கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமாகியது 2007-ஆம் ஆண்டு 'தேசமுத்துரு' என்ற தெலுங்கு படத்தின் மூலமாகத்தான். அப்படத்தினைத் தொடர்ந்து ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் எனப் பல மொழிப் படங்களிலும் நடித்து வருகின்றார்.


படங்களில் எந்தளவிற்கு பிஸியாக இருக்கின்றாரோ அந்தளவிற்கு அந்தளவு ஹன்ஷிகா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர். அதில் எப்போதுமே தனது புகைப்படங்கள் மற்றும், வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து வருவார்.


இந்நிலையில் தற்போதும் பஞ்சு மெத்தை போன்று உடையணிந்து ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாது இன்றைய நாள் தனக்கு நல்ல நாள் எனவும் கூறி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.


Advertisement

Advertisement