கோலங்கள் – எதிர்நீச்சல் சீரியல்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசம் குறித்து இயக்குநர் திருச்செல்வம் அளித்திருக்கும் பேட்டி தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் இயக்குநர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். மேலும் இவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து வந்துள்ளார்.
இதன் பின் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார். அதற்குப் பின்னர் தான் இவர் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார். அந்த வகையில் இவர் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற தொடரில் இணை இயக்குநராக பணியாற்றினார்.
மேலும் அந்த தொடரின் மூலம் நடிகராகவும் திருச்செல்வம் அறிமுகமானார். அதற்கு பிறகு கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த தொடர் மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அதோடு இந்த தொடருக்காக பல விருதுகள் வாங்கி இருக்கிறார் திருச்செல்வம். இதனை தொடர்ந்து இவர் அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம், கோலங்கள் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கி இருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய சீரியலில் நடித்தும் இருக்கிறார். மேலும், திருச்செல்வம் சீரியல் எல்லாம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதற்கு காரணம், இவர் இயக்கும் சீரியல் பெரும்பாலும் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்ட கதைகளாக அமைந்திருக்கும்.அத்தோடு தற்போது இவர் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட தொடர்.
எனினும் தற்போது சீரியல் சூடு பிடித்து சென்று கொண்டிருக்கின்றது. அடுத்து என்ன நடக்கும்? என்று ஆர்வத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகையும், வசனகர்த்தாவுமான ஸ்ரீவித்யா அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கோலங்களில் வரும் பெண்களுக்கும், எதிர்நீச்சலில் வரும் பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து இயக்குனர் திருசெல்வத்திடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு இயக்குநர் திருசெல்வம் கூறியிருப்பது, கோலங்களில் வரும் அபி, ஆனந்தி, ஆர்த்தி, உஷா, கங்கா, மேனகா ஆகியோர் வீட்டில் சுதந்திரமாக இருந்து வெளியே சுதந்திரத்தை தேடியவர்கள். ஆனால், எதிர் நீச்சலில் வரும் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி ஆகியோர் வீட்டுக்குள்ளேயே சுதந்திரத்தை இழந்து தங்களுடைய சுயத்தையும் இழந்து வாழ்கிறார்கள். அதனால் வெளியிலேயும் என்ன செய்வதென தெரியாமல் குழப்பத்திலும் பயத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் முதலில் வெளியே வருவார்கள் சுயத்தையும் மீட்பார்கள்.அத்தோடு சுதந்திரமாக வாழ்வது மிகப் பெரிய வெற்றியை காண்பார்கள். அப்படி பார்த்தால் கோலங்கள் பெண்களும் எதிர்நீச்சல் பெண்களும் வெற்றி பெற்றவர்களே என்று தெரிவித்து இருக்கிறார்.
Listen News!