குறும்படங்களைத் தயாரித்து வந்ததன் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றவர் தான் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநராக அறியப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.இந்தப் படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியிருந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடல் வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரமோ வீடியோவில், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பழைய யுவன் வேணும் சார் என கேட்க, தனது சிறு வயது படத்தை அவருக்கு யுவன் வழங்குகிறார். இதனையடுத்து ஏமாற்றமடையும் பிரதீப் புதுசாவே போய்டலாம் என்கிறார்.
பிரதீப் பாடல் வரிகளை சொல்ல, யுவன் இசையமைக்கிறார். இந்தப் பாடல் காதல் பாடலாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் இவானா நாயகியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- என்னைக் கேட்காமல் எப்படி அந்த பெயரை வைப்பார்கள்- குலுகுலு திரைப்படத்தின் மீது மான நஷ்ட வழக்கை பதிவு செய்த கூல் சுரேஷ்
- செம்பருத்தி சீரியலின் கிளைமாக்ஸ் சீனுக்காக பார்வதி கட்டிய புடவையின் விலை இத்தனை கோடியா?
- வாரிசு திரைப்படம் பமிலி ராஃமா என்று யார் சொன்னது – புதிய அப்டேட்டைக் கொடுத்த சரத்குமார்
- மச்சினன் தனுஷிற்கு தாய் ஸ்தானத்திலிருந்து வாழ்த்துக் கூறிய செல்வராகனின் மனைவி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!