விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. கடந்த செப்டம்பர் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறியிருந்தனர். இந்த நிலையில் இவர்களை அடுத்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.
அதுமட்டுமல்லாது எஞ்சி இருக்கின்ற அனைத்துப் போட்டியாளர்களுக்குமே அதிகளவிலான ரசிகர்கள் இருப்பதனால் இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் அதிகரித்துச் சென்ற வண்ணமே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக முக்கியமான போட்டியாளர்களாக அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் ஜொலிக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் அசீமினுடைய பிறந்தநாள் ஆகும். இதற்காக நேற்றிரவு பிக்பாஸிடம் அசீம் ஒரு வேண்டுகோளை முன் வைக்கின்றார். அதாவது நாளைக்கு என்னுடைய பர்த்டே எங்க வீட்டில என் தம்பி நம்பர் வாங்கி மட்டன் பிரியாணி, சிக்கன் 65, தயிர்ப் பச்சடி எனப் பல உணவு வகைகளைக் கூறி இதை மட்டும் என்க வீட்டில கொடுக்க சொல்லி சொல்லிவிடுங்க பிக்பாஸ் எனக் கமெராவின் முன் நின்று கெஞ்சுகின்றார்.
இந்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகின்றது.
Listen News!