• Sep 20 2024

முக்கிய நாளில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்ட மிட்ட படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக மாறன் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதோடு வசூலிலும் பின்னுக்குத் தள்ளியது. இதனைத் தொடர்ந்து இவர் நடிக்கும்படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

அந்த வகையில் தற்பொழுது திருச்சிற்றம்பலம் என்னும் படத்தில் நடித் வருகின்றார். இப்படத்தை இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கி வருகின்றார். அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்ததை அடுத்து, வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில், நடிகர்கள் தனுஷ், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ஆகியோர் நடித்துள்ளேன்.

இந்நிலையில் திருசிற்றம்பலம் படத்தில் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி இசைவெளியீட்டு விழாவை நடத்த வாய்ப்பு உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு விரைவில் வெளியிடும் என்றும் கருதப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement