தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நட்சத்திரங்களில் ஒருவர் தான் விஷால். இவர் நடிப்பில் இறுதியாக வீரமே வாகை சூடும் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இருப்பினும் அப்படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை. இதனை அடுத்து லத்தி என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சுனைனா நடித்துள்ளார்.இதனை அடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். மேலும் அவருக்கு 45 வயது ஆகின்றது. ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.இவருக்கு ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், சில காரணங்களால் திருமணம் நின்றுவிட்டது.
இதனால் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்வேன் என தொடர்ந்து கூறி வருகிறார். மேலும் திருமணம் பற்றி அவரிடம் சில வருடங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பினால் ஆர்யா திருமணம் செய்யட்டும் அதன் பின் நான் செய்கிறேன் என பதில் கூறுவார்.
ஆனால் தற்போது ஆர்யாவுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. தற்போதும் விஷால் திருமணம் செய்யவில்லை. இதனால் தற்பொழுது இது பற்றி கேட்டதற்கு ' பிரபாஸ் திருமணம் செய்யட்டும், அதே நாளில் நானும் திருமணம் செய்துகொள்கிறேன்' என கூறி சமாளித்து இருக்கிறார்.இவரின் இந்த கருத்து வேடிக்கையாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருவதையும் காணலாம்.
Listen News!