• Sep 20 2024

அரபிக் குத்துக்கு ஒரு வருடம்; இதுவரை காணாதா வீடியோவை வெளியிட்ட நடிகை பூஜா ஹெக்டே

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.

பீஸ்ட் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. பீஸ்ட் திரைப்படம் விஜய் படங்களில் குறிப்பாக தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாகியது. 

இப்படம் சன் நெக்ஸ்ட் தளத்திலும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் கடந்த ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்தார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாண்டார். கிரண் கலை இயக்குநராக பணிபுரிந்தார்.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார் , மேலும், செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

இந்நிலையில் அரபிக் குத்து பாடல் வெளியாகி ஒரு வருடம் ஆவதையொட்டி, நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு  இதுவரை காணாத பீஸ்ட் படத்தின் புதிய BTS வீடியோவை வெளியிட்டுள்ளார்.பீஸ்ட் படத்தில் ஒரு திருமண வீட்டில் பூஜா ஹெக்டே - விஜய் முதல்முறையாக சந்திக்கும் காட்சியின் மற்றொரு நடன வடிவமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. 

படத்தில் இடம்பெற்ற நடன அசைவுகள் இல்லாமல் புதிய நடன அசைவுகளுடன் இந்த வீடியோ அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement