• Nov 17 2024

சில பேர் தான் உண்மையாக இருக்கின்றார்கள்- விஜய் தேவர் கொண்டாவுடன் ஜாலி ட்ரிப் சென்ற சமந்தா

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா.இவர் நடிகர் நாகசைத்தன்யாவைப் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் கணவருக்கும் இவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரைப் பிரிந்து விட்டார்.

திருமண வாழ்க்கை முடிந்துவிட்டதால்  மன அழுத்தத்தில் இருந்து மீள சுற்றுலா பலவற்றிற்குச் சென்று வந்த இவர் தற்பொழுது கோலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகின்றார்.  நடிப்பு மட்டுமின்றி புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமாவுக்கு நடனமும் ஆடினார். இதனால் அவரது கரியர் கிராஃப் உச்சம் சென்றது.


இப்படி அவரது கரியரின் கிராஃப் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த சூழலில் அவருக்கு மையோசிடிஸ் எனும் அரிய வகை தோல் நோய் வந்தது. இதுகுறித்து அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரசிகர்கள் அனைவரும் அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். தன்னம்பிக்கை இழக்காத சமந்தா தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு தற்போது அந்த நோயிலிருந்து மீண்டிருக்கிறார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து குஷி என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்திலிருந்து அண்மையில் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

இந்நிலையில் குஷி படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் துருக்கிக்கு சென்றிருக்கின்றனர். அங்கு ஒரு ரெஸ்டாரண்ட்டில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும், "நல்லது கெட்டது, ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்வி என அனைத்தையும் இந்த வருடத்தில் பார்த்துவிட்டேன்.


 ஆனால் வெகு சிலர்தான் உண்மையான நண்பர்களாக உடன் நிற்கிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.மேலும் சமந்தா நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement