• Sep 20 2024

அஜித் மட்டுமே பாட்ஷா கேரக்டருக்கு சரியாக இருப்பார் - பிரபல காமெடி நடிகரோட ஆசை

stella / 2 years ago

Advertisement

Listen News!

90களில் தொடங்கி தற்பொழுது வரை தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். குணச்சித்திர வேடங்களில் தொடங்கி வில்லன் கதாப்பாத்திரம் என்பவற்றில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகி உச்சத்தில் இருக்கும் நடிகராகவும் வலம் வருகின்றார்.

இவர் நடிப்பில் வெளியாகிய தளபதி அண்ணாமலை முத்து ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதனை அடுத்து கடந்த 1995ல் வெளியாகி மாஸ் காட்டிய திரைப்படம் தான் பாட்ஷா. இப்படம் தமிழ் சினிமாவின் தரமான ஃபேன் பாய் சம்பவமாக அமைந்தது. ஷ

பஞ்ச் டயலாக், ரஜினியின் ஸ்டைல், கேங்ஸ்டர் லுக், தேவாவின் பிஜிஎம், ரகுவரனின் வில்லத்தனம் என, சூடு பறக்கும் தம் பிரியாணி ரேஞ்சுக்கு, ரசிகர்களுக்கு அன்லிமிடெட் ட்ரீட்டாக அமைந்தது.'பாட்ஷா' படத்தின் வெற்றியால், அதன் இரண்டாம் பாகமும் வர வேண்டும் என ரசிகர்கள் ரொம்பவே விருப்பம் தெரிவித்தனர்.

ஆனால், இனி நாங்களே நினைத்தாலும் 'பாட்ஷா' மாதிரி ஒரு படம் பண்ண முடியாது என, ரஜினியும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் கூறிவிட்டனர். ஆனாலும் 'பாட்ஷா' படத்தின் ரீமேக்காவது வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் 'பாட்ஷா' படத்தின் ரீமேக் குறித்த பேச்சுகள் வைரலாகி வருகின்றது. இதுகுறித்து பிரபல காமெடி நடிகர் கருணாகரனும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். "பாட்ஷா படத்தின் ரீமேக் கண்டிப்பாக வரவேண்டும் எனவும், அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பதிலாக அஜித்குமார் நடிக்கணும்" என்றும் கூறியுள்ளார். அஜித் மட்டுமே பாட்ஷா கேரக்டருக்கு சரியாக இருப்பார் என கருணாகரன் கூறியுள்ளது, அஜித் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement