• Nov 10 2024

அடடேய் ...நடிகை அஞ்சலியா இது..? உடல் மெலிந்து ஆளே மாறிட்டாங்களே..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை அஞ்சலி ஒரு காலகட்டத்தில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.  தமிழில் மட்டுமின்றி, இவர் தெலுங்கு, மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். பிறகு சமீபகாலமா பெரிதாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு வரவில்லை என்பதால், படங்களின் பாடல்களில் கவர்ச்சி நடனம் ஆட துவங்கிவிட்டார்.

அந்த வகையில், மச்சேர்லா நியோஜகவர்கம் என்றும் தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த “ரா ரா ரெட்டி” என்ற பாடலில் நடிகர் நிதினுடன் இணைந்து கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். அந்த பாடலும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த பாடலில் நடனமாடியதை தொடர்ந்து சில வெப் தொடர்களிலும் அவர் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் “RC15 ” திரைப்படத்தில் அஞ்சலி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகை அஞ்சலி மிகவும் உடல் எடையை குறைத்து கொண்டு செம அழகாக மாறியுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் அஞ்சலி மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருக்கிறார் எனவே புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது அஞ்சலியா..? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement