• Nov 19 2024

“ஒரு பாட்டுக்கு ஒரு கோடி” நண்பர்களால் நழுவிப்போன வாய்ப்புக்கள்; ‘கானா’ உலகநாதனின் வலி நிறைந்த பக்கம்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மிஷ்கின் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு வெளியான `சித்திரம் பேசுதடி' என்ற படத்தில் `வால மீனுக்கும்...' என்ற பாடலைப் பாடி அதை பட்டித் தொட்டியெல்லாம் பரவச் செய்தவர் `கானா' உலகநாதன். அத்தோடு கானா'வை தமிழ் சினிமாவில் பரவலாக்கியவர்களில் முக்கியமானவராகவும் இவர் இருக்கின்றார்.


இருப்பினும் தற்போது அவருக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை என்பதுதான் அவருக்கு இருக்கும் மிகப்பெரிய வருத்தம். இதுகுறித்து சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் அவர் கூறிய விடயத்தின் மூலம் வலி நிறைய வார்த்தைகள் இருப்பதனை உணர முடிந்தது.

அந்தவகையில் "சினிமாவில் தொடர்ந்து உங்கள பார்க்க முடியல இடைப்பட்ட காலத்தில் எங்கிருந்தீர்கள்" என அவரிடம் கேட்டிருந்தனர். அதனையடுத்து அவர் கூறுகையில் 'வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் வந்த சீசனில் என்னைப் புதிதாக ஹெலிஹேப்டர் கூட வாங்கிட்டதாக கதையைக் கட்டி விட்டார்கள். அதுமட்டுமல்லாது 4,5 வீடு வாங்கியதாகவும் கூறினார்கள். அப்பிடி எல்லாம் சொன்னாங்க, அதற்கு நானும் ஆமா என்று தான் கிண்டலாக சொன்னேன் என்கிறார்.


ஏனெனில் அந்தளவுக்கு அந்தப்பாடல் ரொம்பவே ஹிட் ஆகிச்சு. மேலும் ஒரு பாட்டுக்கு எவ்வளவு தருவாங்க எனக் கேட்பார்கள். அதற்கு நான் 5இலட்சம் என்பேன். அட அவ்வளவு தானா என்பார்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இவர்கள் எல்லாம் இப்படிப் புரளி பேசுகின்ற நேரத்தில் என்னிடம் ஒரு வீடும், ஒரு காரும் மட்டுமே இருந்ததாகவும் கூறியுள்ளார். அந்தப் பாட்டிற்கு பின்னர் பல வாய்ப்புக்கள் தருவதாக பலரும் கூறி இருந்தனர். ஆனால் யாருமே இதுவரை அப்பிடி ஒரு வாய்ப்பு தரவில்லை எனவும் கூறியுள்ளார்.


இதற்கு காரணமே அவங்க தேவையான போது மட்டும் நம்மள use பண்ணிக்கிறாங்க அவ்வளவு தான் என்றார். மேலும் வாய்ப்ப்புக்கள் வரும் போது அது என் நண்பர்களாலேயே நழுவிப் போன சந்தர்ப்பங்களும் உண்டு எனவும் கூறி உள்ளார். அதாவது "ஒரு பாட்டுக்கு எவ்வளவு கேட்கிறாரு" என கேட்கும் போது "1கோடி கேட்கிறாரு" என சொல்லி அந்த வாய்ப்பை இல்லாமல் பண்ணியதாகவும் ரொம்பவே பீல் பண்ணிக் கூறியிருக்கின்றார் உலகநாதன். 

Advertisement

Advertisement