• Nov 17 2024

ஆஸ்கார் விருது வென்ற பொம்மன், பெள்ளி தம்பதிக்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு.. எதனால் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை  இந்தியாவின் The Elephant Whisperers என்ற படம் வென்றுள்ளது. அதாவது யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டியானைகளின் வாழ்வியலையும், இத்தகைய யானைகளை பரமாரிக்கும் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமின் தம்பதிகளின் வாழ்க்கையையும் இப்படம் ஆனது மிகவும் தத்ரூபமாக காட்டியிருந்தது. 


அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தாயை பிரிந்து தவித்த பிறந்து 3 மாதங்களே ஆன ரகு என்கிற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயை பிரிந்து தவித்த அம்முக்குட்டி என்கிற பொம்மி யானையும் முதுமலை வளர்ப்பு முகாமுக்கு கொண்டுவரப்பட்டு, அதனை பராமரிக்கும் பொறுப்பு பொம்மன் - பெள்ளி என்ற பாகன் தம்பதிகளிடம் வனத்துறை ஒப்படைத்தது. 

இந்த இரு யானைகளையும் தங்களது பிள்ளைகள் போல் வளர்த்த பொம்மன், பெள்ளி தம்பதியை மையமாக வைத்து தான்  'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்கிற ஆவண குறும்படம் எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் தம்பதியை சந்திக்க ஏப்ரல் 9-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகின்றார்.


இதனால் பொம்மன், பெள்ளி தம்பதிக்கு 24மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொம்மன், பெள்ளி தம்பதியைக் காண வருகின்ற அனைவரும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்ப்படுகின்றனர்.

Advertisement

Advertisement