• Sep 20 2024

அட இந்த விருது நம்ம ஐஸ்வர்யா ராஜேஸுக்கா கிடைத்தது, மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள், வைரலாகும் புகைப்படங்கள்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மையாக தமிழ் படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை. இவர் பல திரைப்பட விருதுகளைப் பெற்றவர் ஆவார். அவர்களும் இவர்களும் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் சைமா விருது வழங்கும் விழாவில் நடிகை ஐஸ்வர்யாவுக்கு திட்டம் 2 திரைப்படத்தில் ஆதிராவாக  நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியதால் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

இது தொடர்பான விடயத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததுடன் அதனை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் என்ற இயக்குனருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் இந்த விடயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. 



Advertisement

Advertisement